ශ්‍රී ලංකා ප්‍රජාතන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය, රුමේනියාව

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம், ருமேனியா

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka, Romania

Embassy Flag

இலங்கை-ருமேனியா உறவுகள்

1957 செப்டம்பர் 15 அன்று முறைசார்ந்த தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இலங்கையும் ருமேனியாவும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் ஓர் நெருக்கமான நட்பையும் ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளும் தத்தமது தலைநகரங்களில் வதிவிடத் தூதர்களின் தலைமையில் தூதரகங்களைப் பராமரித்து வருகின்றன.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க (1974), பிரதமர் ஆர். பிரேமதாச (1986), நீர்ப்பாசன அமைச்சர் மைத்ரிபால சேனநாயக்க (1973), வெளிநாட்டு அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத் (1978), வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் (2013), வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரபன (2019), வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி (2024) மற்றும் வெளிநாட்டு அமைச்சர் விஜயத ஹெரத் (2026) ஆகியோரின் பயணங்கள் உட்பட, இலங்கையிலிருந்து ருமேனியாவிற்கு பல உயர் மட்டப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்திய முன்னேற்றங்களில் ஒன்று, ருமேனியாவில் ஒரு பெரிய இலங்கை சமூகம் வசிப்பதாகும். ருமேனியாவின் குடிவரவுத் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தின்படி, ஏப்ரல் 2026 நிலவரப்படி, சுமார் 26,000 இலங்கையர்கள் ருமேனியாவில் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் ருமேனியப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளையும் மேம்படுத்துகின்றனர்.